அத்தியாயம் 15: ஹே சண்டக்காரா..!!
அந்த சாவிகளை பெற்றுக் கொண்ட ஈஸ்வரி, “இங்க சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா டி..???" என்று கேட்டாள். “இத்தனை வருஷமா நான் இங்க தான் இருக்கேன். அத சாப்பிட்டு தான் உயிர் வாழுறேன். இத்தனை நாளா இத பத்தி எல்லாம் என்கிட்ட நீ ஒரு வார்த்தை கூட கேட்டதே இல்லையே... இப்ப ஏன் கேக்குற..?? ஏன்னா அத நீங்க சாப்பிட போறீங்க அப்படி தானே...!!!" என்று வலி நிறைந்த குரலில் கேட்டாள் காவியா.
ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத ஈஸ்வரி காவியா தன்னிடம் கொடுத்த ஆடைகளை விரித்து பார்த்தவள், “டிரஸ் எல்லாம் நிறைய செலவு பண்ணி வாங்கி இருப்ப போல..!!! அதான் அவனோட அம்மா எல்லாத்தையும் அவங்களே பார்த்துக்கிறேன்னு சொன்னாங்கள்ள.. அப்புறம் நீ ஏன் தேவை இல்லாம இத செலவு பண்ணி வாங்குன..???
காசு கைல லட்சக்கணக்கில புலங்குனா இப்படி தான் கண்ணு முன்னு தெரியாம செலவு பண்ண தோணும். அவங்க எல்லாத்தையும் பண்றேன்னு சொல்லும் போது நம்ம எதுக்கு இதெல்லாம் பண்ணனும்...??? நீ உன் இஷ்டத்துக்கு இப்படி எல்லாம் அனாவசிய செலவு பண்ணு. ஆனா நாங்க பண்ற செலவுக்கு மட்டும் கணக்கு கேளு." என்று சலிப்புடன் சொன்னாள்.
“அவங்க எல்லாத்தையும் பாத்துக்குறேன்னு தான் சொல்லுவாங்க. ஏன்னா அவங்க உங்கள மாதிரி இல்ல. நிங்க தான் எனக்கு என்னான்னு எதயும் கண்டுக்காம இருப்பீங்க. என்னாலையும் அப்படி இருக்க முடியுமா..???" என்று நினைத்த காவியா, “எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு மா. என்ன நெஜமாவே நீங்க தான் பெத்திங்களா..?? இல்ல சின்ன புள்ளைங்க கிட்ட சும்மா உன்ன குப்பை தொட்டியில இருந்து தூக்கிட்டு வந்தோம்னு போய் சொல்லி ஏமாத்துவோம்ல.. அந்த மாதிரி நிஜமாவே என்ன எங்க இருந்தாவது தூக்கிட்டு தான் வந்தீங்களா..???
இவன் கல்யாணத்துக்கு லட்ச கணக்கில நான் லோன் வாங்கி செலவு பண்ணலாம். என் கல்யாணத்துக்கு ராகவ் வீட்ல பத்து பைசா குடுங்கன்னு கேட்கல. நகை போடுங்கன்னு சொல்லல. ஆனா, நான் இந்த டிரஸ் வாங்குறது அனாவசிய செலவா..??" என்று கோபமும் வருத்தமும் நிறைந்த குரலில் கேட்டாள். 😒 🥺
“ஏன் டா காவியா கண்ணு இப்படி எல்லாம் பேசுற..???" என்று அவளுடைய அப்பா கேட்க அதற்குள் முந்தி கொண்டு வந்த காவியாவின் அண்ணன் ராஜேஷ், “இங்க பாரு காவியா, உன்கிட்ட எத்தன தடவ சொல்றது..?? என்ன அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசினா, எனக்கு கெட்ட கோவம் வரும். மரியாதையா ஒழுங்கா என்ன அண்ணன்னு கூப்பிடு." என்று கோவமாக சொன்னான்.
“முதல்ல நான் உன்ன அண்ணன்னு பெருமையா எல்லார்கிட்டயும் சொல்ற மாதிரி ஏதாவது ஒரே ஒரு விஷயம் லைஃப்ல பண்ணி காட்டு டா. அதுக்கப்புறம் நான் உன்ன அண்ணான்னு கூப்பிடுறேன். எனக்கு தெரிஞ்சு நீ பண்ண ஒரே சாதனை இவங்கள கல்யாணம் பண்ணதும், இப்ப குழந்தை பெக்க போறதும் தான்." என்று சொல்லிவிட்டு சிரித்தவள், அதற்கு மேல் அவனை ஒரு ஆளாக கூட கண்டு கொள்ளவில்லை. 😂 😂 😂
காவியா பேசியதை கேட்டு ராஜேஷுக்கு கோபம் வந்தாலும் அவள் சொல்வது உண்மை தான் என்பதாலும், அவளை தான் பகைத்துக் கொண்டால் அவளிடம் இருந்து கிடைக்கும் பணம் வராமல் போய்விடும் என்று நினைத்தவன், அமைதியாக இருந்து விட்டான்.
கமலின் வீட்டில்...
காலை 8 மணிக்கு மேல் எழுந்து குளித்து கிளம்பிய கமல், தன் அறையை விட்டு வெளியே வந்தான். அவனைப் பார்த்த கயல், “டீ வேணுமா மாமா..???" என்று ஆசையாக கேட்க, அவளை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் வெளியே வந்த கமல் தன் பைக் ஐ ஸ்டார்ட் செய்து; காவியா தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு வந்தான். 🏍️
கமல் அங்கே அடிக்கடி காவியாவை பார்க்க வருபவன் என்பதால், அந்த ஹாஸ்டலின் வார்டன் அவனை தடுக்காமல் உள்ளே விட்டார். கமலுக்கு காவியாவின் பெற்றோர்களை சந்திக்கும் விருப்பம் துளியும் இல்லை என்பதால், அவர்கள் எங்கே தங்கி இருக்கிறார்கள் என்று அந்த வார்டனிடம் கேட்டு தெரிந்து கொண்டவன்; தெரியாமல் கூட அந்த பக்கம் திரும்பி பார்த்து விடக்கூடாது என்று அமைதியாக காவியாவின் அறையின் அருகே வந்து, அந்த அறையின் கதவை அவளுடைய பெயரை சொல்லி அழைத்தபடி தட்டினான்.
காவியா உள்ளே இருந்து, “டோர் ஓபன்ல தான் இருக்கு கமல் உள்ள வா." என்று சொல்ல, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் கமல். மஞ்சள் நிற டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து இருந்த காவியா; தன் கையில் ஒரு துண்டை வைத்து கொண்டு கமல் ஐ பார்த்து வேகமாக திரும்ப, தண்ணீர் சொட்ட சொட்ட இருந்த அவளுடைய நீண்ட கூந்தல் அவளை ஒரு சுற்றுசுற்றி அவளுடைய முகத்தில் வந்து அடித்துவிட்டு அவளுடைய தோளில் விழுந்தது.
“நீ வரும்போது என் ஃபேமிலில யாரையாவது பாத்தியா..?? அவங்க உன்கிட்ட ஏதாவது கேட்டு உன்ன டிஸ்டர்ப் பண்ணாங்களா..??" என்று கேட்டப்படியே தன்னுடைய தோளில் இருந்த தலைமுடியை மீண்டும் காவியா தூக்கி தன்னுடைய முதுகில் பக்கம் போட, அவளுடைய கூந்தலில் இருந்த நீர் துளிகள் கமலின் முகத்தில் பட்டு தெரித்தது. துளியும் மேக்கப் இன்றி வெட் லுக்கில் காவியாவை அப்படி பார்க்க கமலுக்கு அவள் பேரழகியாக தெரிந்தாள். 😍 🙈
அதனால் தன்னை மறைந்து அவளைப் பார்த்து ரசித்து நின்றபடி இருந்த கமல் காவியா கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருக்க, அவன் முன்னே தன்னுடைய ஒரு கையை நீட்டி சொடக்கு போட்ட காவியா; “ஓய்.. என்ன ஆச்சு..!!! அவங்க ஏதாவது உன்கிட்ட பேசி சண்டை போட்டாங்களா..??? அதான் இப்படி பேய் அரஞ்ச மாதிரி நிக்கிறியா..??" என்று அவசரமான குரலில் கேட்டாள்.
கமல்: “நோ.. நோ.. நான் அவங்கள பாக்கவே இல்லை. கயலுக்கும், எனக்கும், நேத்து கொஞ்சம் சண்ட. அதான் அத பத்தி யோசிச்சிட்டு அப்படியே நின்னுட்டேன்." என்று தன் வாய்க்கு வந்ததை அவளிடம் சொல்லி சமாளித்தான்.
கயல்: “நீங்க என்னைக்கு தான் சண்டை போடுறத நிறுத்துவீங்களோ.. சண்டை போட்டு சண்டை போட்டு போர் அடிக்கலையா உங்களுக்கு..?? பேசாம நீயும் நம்ப சிக்கிம் போயிட்டு வந்ததுக்கு அப்புறமா அவள சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. அப்பையாவது உங்களுக்குள்ள ரெஸ்பான்சிபிலிட்டிஸ் அதிகமாக்கி மெச்சூரிட்டி வருதான்னு பார்ப்போம்." என்று சொல்லி கொண்டே தன்னுடைய தலையை துவட்டி கொண்டுு இருந்தாள்.
இன்று ஏனோ காவியாவின் ஒவ்வொரு சிறிய அசைவுகளும் கூட கமல் ஐ அவள் பக்கம் ஈர்த்தது. பொதுவாக எப்போதும் காவியா அவனுடைய கண்களுக்கு அழகாக தெரிந்தால், அதை நேரடியாக அவளிடமே அவன் சொல்லி விடுவான். ஆனால் இன்று அவளிடம் அப்படி அவனால் வெளிப்படையாக பேச முடியவில்லை. ஏதோ ஒன்று தான் அவளைப் பார்த்து ரசிப்பதை அவளிடம் இருந்து அவனை மறைக்க தோன்றியது.
அதனால் தன்னுடைய கண்கள் நட்பையும் தாண்டி காவியாவை பார்த்து ரசிக்கிறதோ என்று நினைத்து ஒரு கணம் தன்னை தானே திட்டி கொண்டட கமல்; சீக்கிரம் இங்கே இருந்து கிளம்பி விட வேண்டும் என்று நினைத்து, “ம்ம்.. ட்ரை பண்றேன். எனக்கு இவ்ளோ சீக்கிரம் மேரேஜ் பண்ற ஐடியா எல்லாம் இல்ல. எனக்கு என்னோட பேச்சுலர் லைஃபை இன்னும் கொஞ்சம் வருஷம் ஜாலியா என்ஜாய் பண்ணனும். நீ அந்த டிரஸ் ஐ குடு. நான் கொண்டு போய் ராகவ் கிட்ட குடுத்துறேன்." என்றான்.
காவியா: நீ என்ன டெலிவரி பாய் ஆ.. வந்த உடனே பார்சல் ஐ வாங்கிட்டு போய் நான் சொல்ற அட்ரஸ்ல டெலிவரி பண்ண..?? உனக்கும் சேத்து தான் நான் புட் ஆர்டர் பண்ணி இருக்கேன். இருந்து சாப்பிட்டு போ.
கமல்: எனக்கு எதுக்கு டி ஆர்டர் பண்ண..?? நான் வீட்டிலயே சாப்பிட்டு வந்துட்டேன்.
காவியா: நீ என்கிட்டையே உருட்டுரியா..?? இவ்ளோ சீக்கிரமா வீட்ல இருந்து நீ என்ன சாப்பிட்டா கிளம்பி இருப்ப..?? ஒழுங்கா சாப்பிட்டு போ. இல்லைன்னா, நீ கிளம்பி வீட்டுக்கு போயிரு. நானே ராகவ் கிட்ட கொண்டு போய் அந்த டிரஸ்ஸ குடுத்துக்குறேன். 😒
கமல்: அய்ய.. சாப்பிட்டு தொலைக்கிறேன். இந்த அடம் பிடிக்கிற விஷயத்தில் மட்டும் எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி தான் டி இருக்கீங்க. நீ ஃபுட் ஆர்டர் பண்ணி இருக்கிறது எல்லாம் ஓகே. பட் உனக்கு தான் இங்க ஹாஸ்டல்லையே ஃபுட் ப்ரொவைட் பண்ணுவாங்கல்ல..!! அப்புறம் ஏன் வெளியில வாங்குற..?? இதுல நான் இந்த டைம்க்கு இங்க வருவேன்னு எனக்கே தெரியாது. உனக்கு எப்படி தெரியும்..?? நீ எனக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணி இருக்க..??
காவியா: “நான் டெய்லியும் ஹாஸ்டல் புட்டு தான் சாப்பிடுவேன். என் வீட்ல இருக்கிறவங்களுக்கு தான் அந்த ஃபுட்டு புடிக்கலையாம். நேத்தே சாப்பிட மாட்டேன்னு ஒரே ராவடி பண்ணாங்க. அதான் இன்னைக்கு எல்லாருக்கும் சேத்து ஃபுட் ஆர்டர் பண்ணேன்.
ஆர்டர் பண்ணும் போது நீயும் வருவன்னு தோணுச்சு. அதான் உனக்கும் சேத்து ஆர்டர் பண்ணேன். நான் நெனச்ச மாதிரி கரெக்டா நீயும்் வந்துட்ட. போதுமா..??" என்று அவள் சொல்லி கொண்டு இருக்க புட் டெலிவரி செய்ய வந்தவர் தான் காவியாவின் லொகேஷன் -க்கு வந்துவிட்டதாக அவளுக்கு கால் செய்தார்.
காவியா போனில் பேசி கொண்டு இருப்பதை கவனித்த கமல், “நீ இரு நான் போய் வாங்கிட்டு வரேன்." என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தான். காவியாவும் அவன் பின்னையே வெளியில் வந்தாள். காவியா ஏற்கனவே அந்த உணவுகளுக்கு ஆன்லைனில் பே செய்து இருந்தாள். அதனால் விரைவில் அவர்கள் அந்த உணவு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு உள்ளே வர, அப்போது சாப்பிடும் நேரம் வந்து விட்டதால், காவியாவை பார்த்து சாப்பாடு என்னாச்சு..?? என்று கேட்பதற்காக அவளுடைய குடும்பமே காவியாவின் அறையை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
- மீண்டும் காதல் வாசம் வீசும் 🌹

Author: thenaruvitamilnovels
Article Title: ரோஜா-13
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.