ரோஜா-16

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
246
0
16
www.amazon.com
அத்தியாயம் 16: உனக்கு என் மேல லவ் இல்ல

“எஸ் ராகவ். ஐ லவ் யூ. அண்ட் ஐ வான்ட் டு மேரி யூ." என்று உணர்ச்சி பொங்க ஆனந்த கண்ணீருடன் சொன்ன காவியா, அந்த ஃப்ளவர் பொக்கேவை வாங்கி கொண்டு ராகவை கட்டி அணைத்த தன்னுடைய காதலை அவனிடம் வெளிப்படுத்தினாள். 😍 🤗 ❤️

அவர்களைப் பார்த்து மகிழ்ந்த அங்கே இருந்த அனைவரும் கைதட்டி அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். 😍 ❤️ சிலர் இந்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிக் கொண்டு இருந்தனர். அங்கே இருந்த பல பெண்களும் தங்கள் விரும்பும் கனவு வாழ்க்கையை நிஜமாகவே காவியா வாழ்கிறாள் என்று நினைத்து அவள் மீது பொறாமை பட்டனர்.

அதில் நம் கயிலும் ஒருத்தி. கயல்விழிக்கு காவியாவை கண்டாலே ஒரு வெறுப்பு வருவதற்கு இதுவும் ஒரு காரணம். அவளுடைய காதலன் ராகவும் சரி, நண்பனாக இருக்கும் கமலும் சரி, ஒரு நாளும் அவளை யாரிடமும் விட்டுக்் கொடுத்ததில்லை. அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஏன் தன்னை மட்டும் அப்படி தாங்குவதற்கு யாரும் இல்லை என்று ஏக்கம் அவளுள் இருந்து கொண்டே இருக்கும்.

காவியா மற்றும் ராகவின் காதலை கண்கூடாக பார்க்கும்போது, அவளால் தன்னுடைய காதல் வாழ்க்கையைப் பற்றி யோசித்து கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. இதுவரை கமல் அவனுக்கு தன் மீது இருக்கும் காதலை வெளிப்படுத்தும் படி இப்போது ராகவ் செய்வதைப்போல இல்லை என்றாலும் கூட சிறியதாக கூட தனக்காக எதுவும் செய்ததில்லை என்று நினைத்துப் பார்த்த கயல், “13, 14 வயசுல இத்துனூண்டு குல்பி ஐ வாங்கி குடுத்து என்னை லவ் பண்றேன்னு சொன்னான் இவன். சரி நம்ப மாமா ஹேண்ட்சம்மா இருக்கானே.. இவனவே லவ் பண்ணா கல்யாணம் பண்ணிக்கிறதுல ப்ராப்ளம் வராது என்று நானும் ஓகே சொல்லிட்டேன்.

பட் அதுக்கப்புறமும் நான் இவனை ட்ரூவா தானே லவ் பண்றேன். மத்தவங்கள பாக்கும்போது தான் இவன் என்ன உண்மையா லவ் பண்றானா, இல்லையான்ற டவுட் வருது. நான் அத பத்தி யோசிக்கிற ஸ்டேஜ் எல்லாத்தையும் தாண்டி வந்துட்டேன் மாமா. இப்ப நீ தான் எனக்கு எல்லாமேன்னு ஆயிடுச்சு. நீயே என்ன வேணாம்னு நினைச்சாலும், என்ன லவ் பண்ணலன்னாலும் நான் உன்னை விட்டுட்டு போக மாட்டேன். நீ எனக்கு மட்டும் தான். நமக்கு மேரேஜ் மட்டும் ஆகட்டும். உன்னை எனக்கு தகுந்த மாதிரி நான் மாத்தி காட்டுறேன்." என்று தன் அருகே இருந்த கமலின் முகத்தை பார்த்து தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

சந்தோஷத்தில் ராகவ் ஐ காவியா கட்டி பிடித்ததை பார்த்து கோபப்பட்ட அவளுடைய அம்மா வேகமாக அவள் அருகே சென்று அவளுடைய காதுகளில் மெதுவாக, “அடியேய் நடு ரோட்டில என்ன டி பண்ணிட்டு இருக்க..!!! அங்க பாரு ஊர் உலகமே உங்கள தான் பாத்துட்டு இருக்கு. இதுல அவன் அவன் போன்ல வீடியோ எடுத்துட்டு இருக்கான்.

நீ ஏற்கனவே இவன லவ் பண்றேன்னு லவ் மேரேஜ் பண்ண போறியே... இது பத்தலையா உனக்கு..?? நாங்க இது அரேஞ்ச் மேரேஜ் -ன்னு தான் நம்ம ஊருக்குள்ள பொய் சொல்லி வச்சிருக்கோம். நாங்க என்ன சொன்னாலும் அதவே எவனும் நம்ப மாட்டேங்கிறான். இதுல நீ இந்த மாதிரி வேலை எல்லாம் பார்த்து நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னா உலகத்துக்கே சொல்லியே ஆகணுமா...???" என்று கடிந்து கொள்ள; நாசுக்காக ராகவிடம் இருந்து விலகிய காவியா, அனைவரையும் பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு; “என்கேஜ்மென்ட் -க்கு டைம் ஆயிடுச்சு. வாங்க எல்லாரும் உள்ள போலாம்.

அதனால் அவர்கள் அனைவரும் மீண்டும் உள்ளே செல்ல தொடங்கினார்கள். உள்ளே செல்கையில் விடாமல் காவியாவின் கையை ராகவ் இறுக்கிப் பிடித்துக் கொண்டான். தனுக்காக செய்த விஷயங்களால் அதீத மகிழ்ச்சியில் இருந்த காவியாவிற்கு, தன்னுடைய குடும்பத்தினரால் என்ன நிச்சயதார்த்தத்தில் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமா என்று யோசித்ததில் தன்னுடைய வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை கூட முழுமனதாக ரசித்து அனுபவிக்க முடியவில்லை.

ராகவ் காவியாவின் கையை பிடித்து கொண்டு மேடையின் மீதுு ஏற, அவர்களின் முன்னே காவியாவிற்கு மிகவும் பிடித்த ஸ்ட்ராபெரி கேக் பல அடுக்குகளில் பெரியதாக ஒரு டேபிளில் வைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்தவுடன் தன் மனதில் இருந்த கவலைகள் அனைத்தையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு இந்த தன்னுடைய காதலனுடன் என்ஜாய் செய்ய வேண்டும் என்று நினைத்த காவியா; கமல் ஐயும் கயல்விழியையும் பார்த்து ஸ்டேஜ் -க்கு மேலே வரும்படி சைகை செய்துவிட்டு, அவர்கள் வந்தவுடன் ராகவுடன் இணைந்து அந்த கேக் ஐ சந்தோசமாக வெட்டினாள்.

அவர்கள் அருகே நின்று கொண்டு இருந்த ராவின் பெற்றோர்கள், தங்களுடைய மகன் மற்றும் வருங்கால மருமகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். 🤩 🥳 கீழே் அமர்ந்து இருந்த அனைவரும் மேடையில் இருந்த ஜோடியை பார்த்து வாழ்த்தி கைப் தட்டினர். கமலின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்ட கயல், இது காவியாவின் பங்க்ஷனாக இருந்தாலும் தனக்கும் கமலுக்கும் நடக்கும் பங்க்ஷன் என்று தானாக கற்பனை செய்துது கொண்டவள்; கீழே இருப்பவர்கள் தங்களை பார்த்து கைதட்டுவதாக நினைத்து மகிழ்ந்தாள். 😍 🤩

கயல்: “இதே மாதிரி நமக்கும் நடந்தா நல்லா இருக்கும்ல மாமா..!!!" என்று ஆசையாக மெல்லிய குரலில் கமலிடம் கேட்டாள்.

கமல்: ஏன் அடுத்தவங்கள பாத்து அப்படியே காப்பி அடிக்கணும்னு நினைக்கிற..??

கயல்: ஏன் இதுவும் நல்லா தானே இருக்கு.. நம்ம காப்பி அடிச்சா, உன் பிரண்டு என்ன காப்பிரைட்ஸ் கேட்டு வந்துருவாளா..??? நம்ம ஊர்ல எல்லாம் நிச்சயதார்த்தம் பண்றேன்னு தட்டு தட்டா கொண்டு வந்து அடுக்கி வச்சுக்கிட்டு, புடவை கட்டி நிக்க வச்சு மோதிரம் மாத்தி தட்ட மாத்தி அனுப்பிச்சு விட்ருவாங்க.

ஆனா இவங்கள பாரேன் எவ்ளோ ஜாலியா இருக்காங்க. இந்த எங்கேஜ்மென்ட் ஏ அவங்களுக்காக அவங்களே நடத்திக்கிற மாதிரி இருக்கு. எல்லாமே அவங்களுக்கு புடிச்ச மாதிரி அவங்களோட லைஃபை அவங்க செலிபிரேட் பண்றாங்க நம்பளும் இந்த மாதிரி பண்ணா தப்பா.??

கமல்: எங்க அம்மாவையும் உங்க அம்மாவையும் பத்தி தெரிஞ்சும், நீ இப்படி எல்லாம் ஆசைப்படுற பாத்தியா...!!! நமக்கு இப்படி நடக்கிறதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல கயல். சோ முடிஞ்ச வரைக்கும் இந்த ஃபங்ஷன்ல உன்னால ஃப்ரீயா எவ்ளோ என்ஜாய் பண்ண முடியுமோ பண்ணிக்கோ.

ராகவ் ஃபேமிலி பெரிய பணக்காரங்க இல்லைன்னாலும், வெல் செட்டில்ட் ஃபேமிலி. எங்க அப்பா போய்ட்டு இருந்த வேலைய விட்டுட்டு தேவை இல்லாம இப்ப தான் ஓன் கம்பெனி ஸ்டார்ட் பண்றேன்னு பண்ணி, என்னென்னமோ பண்ணிட்டு இருக்காரு. இந்த டைம்ல சிம்பிளா மேரேஜ் பண்ணனும்னா கூட அதுக்கே நமக்கு பட்ஜெட் இடிக்கும். இதுல நீ இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும்னு ஆசைப்பட்டா அதுக்கு நாங்க எங்க போறது..???

கயல்: “அட போடா. உன்கிட்ட எல்லாம் எனக்கு இது வேணும்னு கேட்கிறதே வேஸ்ட். இந்த காவியா எவ்ளோ லக்கியா இருக்கா பாரு. அவளுக்கு கேட்காமயே எல்லாமே கிடைக்குது. நான் கேட்டா கூட, எனக்கு எதுவும் கிடைக்க மாட்டேங்குது. அவளுக்கு வச்சவன் அப்படி. எனக்கு வாச்சவன் இப்படி. எல்லாம் விதி." என்று சொல்லி சலித்துக் கொண்டாள்.

கமல்: தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி புரிந்து கொள்ளாமல் அவளைப் பற்றி மட்டும் யோசித்து கயல் பேசிக்கொண்டு இருப்பதால் கோபப்பட்டவன், “உனக்கு இந்த மாதிரி லக்சூரியஸ் ஆன லைப்ஸ்டைல் வேணும்னா, ராகவ் மாதிரி நல்லா காசு பணம் வைத்திருக்கிற ஆளா பார்த்து அவனை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ. நான் ஒன்னும் உன்ன தடுக்க மாட்டேன்.

உனக்கு ஓகே -ன்னா சொல்லு. நானே அத்தை மாமா கிட்ட பேசி உனக்கு நல்ல ரிச் ஆன மாப்பிள்ளையா பாக்க சொல்றேன். நீ அவன கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இரு மா. எதுக்கு..!!! எங்க மிடில் கிளாஸ் ஃபேமிலில இருந்து கஷ்டப்படணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா...??" என்று எரிச்சலுடன் கேட்டவன், கயல் ஐ அப்படியே விட்டுவிட்டு நடந்து சென்று காவியாவின் அருகே நின்று கொண்டான். 😒 😤

ஒரு கேக் பீஸ் ஐ வெட்டி ராகவிக்கு ஊட்டி விட்டு திரும்பிய காவியா தன் அருகே கமல் நிற்பதை பார்த்துவிட்டு, அவன் அருகே சென்று அவனுக்கும் கேக் ஐ ஊட்டி விட்டாள். அதை சாப்பிட்ட கமல் அவள் கையில் இருந்த கேக் பீசில் இருந்து சிறிது கேக் ஐ எடுத்து, அவளுக்கு ஊட்டி விட்டான். பிறகு தானே அங்கே இருந்த ஒரு கத்தியை எடுத்து ஒரு சிறிய கேக் பீஸ் ஐ கட் செய்தவன், ராகவிற்கும் கேக் ஐ ஊட்டி விட்டான்.

அங்கே கமலால் புறக்கணிக்கப்பட்டு தனியாக நின்று கொண்டு இருந்த கயல் அவர்களை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். 😏 அவள் ஏன் தன் கண்ணன் மாமாவிற்கு எப்போதும் இரண்டாம் பட்சமாகவே தெரிகிறோம் என்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

பின் அந்த பெரிய அடுக்குகள் நிறைந்த கேக் அங்கே இருந்து அகற்றப்பட்டு, நிச்சயதார்த்தத்திற்கு வந்திரத்தவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது. காவியா கமலின் காதுகளில் மெதுவாக ஏதோ சொல்ல சரி என்பது போல் அவளைப் பார்த்து தலையாட்டிய கமல், இரண்டு நிமிடத்தில் அங்கே அவள் ராகவிற்காக வாங்கிய திருமண மோதிரத்தை எடுத்து கொண்டுு வந்து ராகவின் அம்மாவிடம் கொடுத்தான்.

அதை வாங்கிக் கொண்ட ராகவின் அம்மா ஒரு தட்டை எடுத்து கொண்டு வந்து அதில் கமல் கொடுத்த மோதிரத்தை வைத்தவள், காவியாவிற்காக தாங்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்த மோதிரத்தையும் எடுத்து வைத்தாள். பின் கீழே முதல் வரிசையில் அமர்ந்து இருந்த குடும்பத்தினரை பார்த்து “மேல வாங்க." என்று கூப்பிட்டவள், மோதிரங்கள் இருந்த தட்டை எடுத்து கொண்டு அந்த ஜோடியின் அருகே சென்று நீட்டினாள்.

ராகவ்: “லேடிஸ் பஸ்ட் மொதல்ல நீயே எனக்கு ரிங் போடு காவியா." என்று காதலுடன் அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தபடி சொன்னான். 😍 😁 😁 😁

காவியா: ராகவின் காதலில் திளைத்துப் போனவள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம் இவன் தான் என்று நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன், தான் ஆசையாக அவனுக்கு வாங்கிய மோதிரத்தை எடுத்து அவனுடைய மோதிர விரலில் அணிவித்தாள்.

- மீண்டும் காதல் வாசம் வீசும் 🌹
 

Author: thenaruvitamilnovels
Article Title: ரோஜா-16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.