Chapter 64

Bhavani Varun

Member
Jan 23, 2025
83
0
6
அனைவரும் வெளியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கவும், “இப்படியே தான் இருப்பா சாப்பிடவும் மாட்டா இவ… இருங்க வரேன்” என்று வள்ளி சனந்தாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க, சனந்தா அவரை பார்த்து, “வெச்சிடுங்க ஆன்ட்டி நான் சாப்பிடுறேன் கொஞ்ச நேரம் தான் முடிஞ்சிரும்” என்று சனந்தா கூறவும்,

“ஏய் சனா சாப்பிடு….. இன்னும் நிறைய நாள் இருக்கு உனக்கு…. அது பொறுமையா பண்ணு ஒரே நாள்ல இவ்வளவும் பண்ண முடியாது” என்று மகேஷ் கூறவும், “அத சொல்லுங்க சீனியர்… இவ உட்காருறதும் இல்லாம என்னையும் சேர்த்து இவ்ளோ நேரம் உட்கார வெக்குறா” என்று கௌதம் சலித்துக் கொண்டான்.

“நான் வேணா உனக்கு ஊட்டி விடவா நீ உன் வேலையை பார்த்துட்டே சாப்பிடுறியா” என்று வள்ளி கேட்க, சனந்தா ஒரு நொடி வள்ளியை பார்த்து, “பரவால்ல ஆன்ட்டி முடிஞ்சிருச்சு நானே சாப்பிட்டுக்குறேன்” என்று தயக்கத்துடன் கூறினாள்.

“ஏன் நான் ஊட்டி விட்டா சாப்பிட மாட்டியா…. இல்ல உனக்கு யாரும் ஊட்டி விட்டா பிடிக்காதா??” என்று வள்ளி கேட்க, “யாரு சொன்னா ஆன்ட்டி, எருமை மாடு வயசு ஆகுதே தவிர, ஒவ்வொரு நாள் அம்மா தான் ஊட்டி விடனும் அப்பா தான் ஊட்டி விடனும்னு அடம் பிடிப்பா” என்று கௌதம் கூற, சனந்தா கௌதமை முறைத்தாள்.

“என்ன ஏன் டி முறைக்கிற உண்மை தானே??? அவ்வளவு ஏன் ஆன்ட்டி இங்க இருந்து ஊருக்கு போனப்ப கூட காலையில டிபன் அம்மா தான் ஊட்டி விடணும் அன்னிக்கு நைட்டு ஹோட்டலுக்கு போயிட்டு எனக்கு அப்பா தான் ஊட்டி விடணும்னு அடம் பிடிச்சு சுத்திட்டு இருந்தாளாம்… அப்பா சொல்லிட்டு இருந்தாரு” என்று கௌதம் கூறவும், “கௌதம் கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருடா படுத்தாத” என்று சனந்தா கூற, அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

“இதுல என்ன இருக்கு அவன் என்ன சொல்லிட்டான் இப்போ… நீ சாப்பிடு இந்தா” என்று வள்ளி ஊட்டி விடவும், உற்சாகத்துடன் வாங்கிக் கொண்டாள் சனந்தா.

சனந்தாவுக்கு ஊட்டி முடிக்கவும் ரொம்ப தேங்க்ஸ் அன்ட்டி!! என்று சனந்தா மனதார கூறினாள். “உனக்கு எப்பயாவது இப்படி வேணும்னா கேளு நான் செய்றேன்” என்று வள்ளி கூறவும், அர்த்தமாக புன்னகைத்து தலையை அசைத்தாள் சனந்தா.

சனந்தா மற்றும் வள்ளி இருவரையும் அப்படி பார்க்க விக்ரமுக்கு மன நிறைவாக இருந்தது. “என்ன மச்சான் சீக்கிரம் ஒரே குடும்பம் ஆயிருவீங்க போலயே…. நீயும் பேச ஆரம்பிச்சுட்ட அம்மா என்னடா சாப்பாடு ஊட்டி எல்லாம் விடுறாங்க அப்புறம் எப்ப கல்யாணம்??” என்று சரவணன் கேலி செய்ய, “டேய் நீ சும்மா இருடா நாங்க பேச மட்டும் தான் டா ஆரம்பிச்சிருக்கோம்… அதுலயும் மண்ண வாரி போட்றாத” என்று விக்ரம் பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.

“ரொம்ப தேங்க்ஸ் சீனியர் எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு… குட் நைட்” என்று சனந்தா கூறி வீடியோ காலை துண்டித்தாள். “ஆமா நீங்க ரெண்டு பேரும் இன்னும் தூங்காம என்ன முழிச்சிட்டு இருக்கீங்க??” என்று விக்ரம் கேட்க, “இல்லடா இவ தினமும் ஏதோ பண்ணிட்டு இருக்கா சரி என்னன்னு சும்மா பார்க்கலாம்னு வந்து உட்கார்ந்தோம்” என்று வள்ளி கூறினார்.

“சரி அதான் முடிச்சுட்டால போய் தூங்குங்க போங்க” என்று விக்ரம் கூறவும், “ஏன் டா எங்கள துரத்துறதிலேயே இருக்க எங்கள துரத்திட்டு என்ன பண்ணலாம்னு இருக்க??” என்று வள்ளி குறும்பாய் கேட்கவும், “நான் என்ன பண்ண போறேன், நான் இங்க திண்ணையில உட்கார்ந்து இருப்பேன், இல்ல மாடிக்கு போவோம், இல்ல ரூம்ல போய் தூங்குவேன் வேற என்னமா பண்ண போறேன்” என்று விக்ரம் கூறினான்.

அனைவரும் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க மணி பத்தை தாண்டியது. சனந்தா சற்று யோசித்து, “சரவணன் எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும் அந்த ரூம்ல” என்று சனந்தா பேசவும், “சரி உன் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா அங்க வெச்சுட்டு என்னன்னு காட்டு” என்று சரவணன் கூறவும், சனந்தா அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு புறப்படவும் சரவணன் எந்திரிக்க விக்ரமும் அவர்களுடன் சென்றான்.

கௌதம், சரவணன் வீட்டிலிருந்து அபிலாஷ், ரம்யா, கார்த்திக், கவிதா மற்றும் சிலரை அழைத்துக் கொண்டு வேகமாக மாடிக்கு அனுப்பி விட்டான். அதே போல் வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் அவர்களையும் மாடிக்கு அனுப்பி விட்டு கௌதமும் சென்று விட்டான்.

“என்ன ஆச்சு? என்ன பிரச்சனை ரூம்ல??” என்று விக்ரம் கேட்க, “பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லையே நாங்க சும்மா பேசணும்னு வந்தோம்” என்று சனந்தா கூறவும், “நீங்க ரெண்டு பேரும் என்ன பேச போறீங்க??” என்று விக்ரம் சட்டென்று கேட்க, “எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் டா உனக்கு என்னடா பிரச்சனை…. அதெல்லாம் உனக்கு எதுக்கு நாங்க சொல்லணும்” என்று சரவணன் கூறவும், விக்ரம் சரவணன் மற்றும் சனந்தாவையும் சேர்த்து முறைதான்.

“உண்மையிலே ஒன்னும் இல்ல சும்மா தான் கூப்பிட்டேன் எனக்கு இந்த ஸ்டவ் சின்ன ப்ராப்ளமா இருக்கு அத பத்தி எப்பயோ கேட்டு இருந்தேன் அவர் கிட்ட இப்ப ஞாபகம் வந்தது அது தான்” என்று சனந்தா எதையோ கூறி சமாளித்தாள். “இல்ல இதுக்கு நீ பதில் சொல்லாமலே இருந்திருக்கலாம்” என்று விக்ரம் கூறவும், சனந்தா மற்றும் சரவணன் சிரித்து விட்டனர்.

சனந்தாவின் கைபேசிக்கு அனைத்தும் ரெடி என்று கெளதமிடம் இருந்து குறுஞ்செய்தி வரவும் அதை சரவணனிடம் காட்ட, “சரி ஓகே சனா ப்ராப்பர்டி எங்க??” என்று சரவணன் கேட்க, சனந்தா ஒரு கைக்குட்டையை எடுத்துக் கொடுக்க, அதை விக்ரம் கண்ணில் கட்டினான் சரவணன்.

“அடேய்… அடேய் என்னடா பண்றீங்க??” என்று விக்ரம் கேட்க, “வேற என்ன மச்சான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போறோம்” என்று சரவணன் கேலி செய்தான்.

“ஏன் இப்படி சொல்லிட்டீங்க??” என்று சனந்தா கேட்க, “ஏம்மா இது கூட புரிஞ்சுக்க தெரியாதா இவ்வளவு வயசு ஆகுது அவனுக்கு” என்று சரவணன் கூறவும், சனந்தா, “எங்களுக்கும் வேற வழி தெரியல இருக்கிற இடத்துல இவ்ளோ தான் எங்களால பண்ண முடிஞ்சது” என்று கூறி அவளும் சிரித்து விட்டாள்.

“சரி வா நீ அங்க சர்ப்ரைஸ் ஆகணும் சரியா” என்று விக்ரமை அழைத்துக் கொண்டு சென்றான் சரவணன். அவர்களுடன் சனந்தாவும் இணைந்து கொண்டாள்.

விக்ரமை அழைத்துக் கொண்டு சரவணன் மாடிக்கு செல்லவும், அங்கே கவிதா மற்றும் ரம்யா இருவரும் சேர்ந்து கேக் பிடித்துக் கொண்டு நிற்க, அவர்களை சுற்றி அனைவரும் நின்று கொண்டிருந்தனர். சரவணன் மெதுவாக அவனது கண் கட்டை அவிழ்த்து விடவும் விக்ரம் அனைவரையும் பார்த்து புன்னகைத்து ரொம்ப நன்றி!!! என்று கூறினான்.

“அண்ணா சீக்கிரம் வந்து கேக் கட் பண்ணுங்க இதை சாப்பிடுறதுக்கு நாங்க எல்லாம் ரொம்ப ஆர்வமா இருக்கோம்” என்று ரம்யா கூறவும், விக்ரம் கேக் கட் செய்து, முதலில் வள்ளிக்கு ஊட்டி விட்டு பின் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு ஊட்டி விட்டான்.

“சனா கேக் ரொம்ப நல்லா இருக்கு” என்று வள்ளி கூற, தேங்க்ஸ் ஆன்ட்டி!!! என்று புன்னகைத்தாள் சனந்தா. அனைவரும் கேக் சாப்பிட்டு சனந்தாவை பாராட்டினர்.

“எனக்கு கண்டிப்பாக கத்துக் கொடுங்க ரொம்ப நல்லா இருக்கு….. நீங்க செய்யும் போது கூட எனக்கு அவ்ளோ நம்பிக்கை இல்ல… இங்க செய்யுறோம் எப்படி வருமோன்னு நினைச்சேன்…. ஆனா, சாப்பிட்டதுக்கு அப்புறம் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு கண்டிப்பா கத்துக் கொடுங்க” என்ற கவிதா கேட்க, “கண்டிப்பா கத்து தரேன்” என்று சனந்தா உறுதி அளித்தாள்.

ஹாப்பி பர்த்டே மச்சான்!!! என்று சரவணன் விக்ரமை அணைத்து கொண்டு கூற, தேங்க்யூ சோ மச்!!! என்று விக்ரம் கூறினான். கௌதம் விக்ரமை அணைத்துக் கொண்டு, “ஹாப்பி பர்த்டே விக்ரம் என்னோட கிஃப்ட் எப்படி இருந்தது??” என்று கௌதம் கேட்க, “உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்தது அதுக்கு ஈடு இணை எதுவுமே இல்ல ரொம்ப தேங்க்ஸ் கௌதம்” என்று மனதார கூறினான் விக்ரம்.

“மச்சான் ஹாப்பி பர்த்டே…. வயசாயிட்டே போகுது டா…. சீக்கிரம் செட்டில் ஆக பாரு” என்று அபிலாஷ் கேலியாக வாழ்த்த, தேங்க்யூ மச்சான் தேங்க்யூ!! என்று விக்ரம் கூறினான்.

“இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா சிரிச்சிட்டே இரு விக்ரம் எங்களுக்கு அது தான் நிம்மதியை கொடுக்கும்” என்று வள்ளி கூற, விக்ரம் புன்னகைத்தான். “இப்ப இருக்கிற மாதிரி எப்பயும் நேர்மையாவும் தைரியமாகவும் இருக்கணும்” என்று ஸ்ரீனிவாசன் வாழ்த்தவும் தேங்க்ஸ் பா என்றான் விக்ரம்.

இப்படி அனைவரும் அவரவர்களின் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டு பின், சரவணன் கௌதம் மற்றும் அபிலாஷ் மூவரும் ரம்யா, கார்த்திக், கவிதா மற்றும் சிலரை அவர் அவர்களின் வீட்டில் விட்டு வர சென்றனர். சனந்தா, வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் அவர்கள் கீழே செல்லவும் அவர்களுடன் சென்று விட்டாள்.

“ப்ச்… அவ கிட்ட பேசவே முடியலையே” என்று விக்ரம் யோசித்துக் கொண்டு இருக்க, அவனது கைபேசி ஒலிக்க, சனந்தா அழைத்திருந்தாள்.

விக்ரம் உற்சாகத்துடன் ஹலோ!! என்று பேசவும், “நீங்க இன்னும் மாடில தான் இருக்கீங்களா??” என்று சனந்தா தயக்கத்துடன் கேட்க, “ம்ம்… ஆமா இங்க தான் இருக்கேன்” என்று விக்ரம் கூற, “ம்ம்… நான் வரலாமா??” என்ற சனந்தா கேட்க, “மை பிளக்ஷர்” என்று விக்ரம் கூறவும் சனந்தா புன்னகையுடன் ஃபோனை துண்டித்து மாடிக்கு சென்றாள் யாருக்கும் தெரியாத வகையில்.

சனந்தா ஒரு பெட்டியை அவளுக்கு பின்னால் மறைத்துக் கொண்டு வரவும் கரண்ட் ஆஃப் ஆனது. அது மேலும் அவளுக்கு வசதியாக போக டப்பாவை அவனுக்கு தெரியாமல் கட்டிலில் ஒருமாக வைத்துவிட்டு விக்ரமுடன் சென்று நின்று கொண்டாள்.

“இதுக்கு நீ கீழே போகாமலே இருந்திருக்கலாமே” என்று விக்ரம் கேட்க, “அப்படி இல்ல ஆன்ட்டி அங்கிள் இருக்காங்க…. மீதி எல்லாரும் கிளம்பிட்டதுக்கு அப்புறம் நானும் இங்கயே நின்னேன்னா எப்படி… ஏதாவது நினைச்சிக்க போறாங்களோன்னு தான் போனேன்” என்று சனந்தா கூறவும், “இவ இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கனும்” என்று விக்ரம் மனதில் நினைத்துக் கொண்டு, சரி என்று கூறினான்.

“ம்ம்… உங்களுக்கு கேக் புடிச்சிருந்துதா??” என்று சனந்தா கேட்க, “உண்மையை சொல்லனும்னா ரொம்ப புடிச்சி இருந்துது…. நான் பெருசா கேக் எல்லாம் விருப்பப்பட்டு சாப்பிடுற ஆள் கிடையாது… ஆனா அந்த கேக் சாப்பிடும் போது எங்க ஊரு சாப்பாடு சாப்பிடுற மாதிரியே எங்க ஊரு வாசமும் சேர்ந்து இருக்கிற மாதிரியே இருந்துது…. எனக்கு அதனாலயே ரொம்ப புடிச்சி இருந்துது….. பூனைக்குட்டி ரொம்ப தேங்க்ஸ்” என்று விக்ரம் கூறவும், சனந்தா புன்னகையுடன் பிளஷர் இஸ் மைன் சார் என்று கூறினாள்.

“சரி என் பர்த்டே அதுவுமா கேட்கிறேன் இந்த சார் சொல்றத நிப்பாட்டு ப்ளீஸ்… ரொம்ப டிஸ்டன்ஸ் இருக்குற மாதிரி இருக்கு” என்று விக்ரம் கெஞ்துலாக கேட்க, “கண்டிப்பா நிப்பாட்டிடுறேன்” என்று சனந்தா கூறவும் இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 64
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.