Chapter 74

Bhavani Varun

Member
Jan 23, 2025
83
0
6
கௌதம் அரை தூக்கத்தில் கண்ணை கசக்கி கொண்டே இறங்கி வந்து பார்த்து, “நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க??” என்று அதிர்ச்சியாக கௌதம் கேட்க, “ஒரு சின்ன வேலையா வந்தேன்” என்று மட்டும் கூறினான் விக்ரம்.

“ம்ம்… சரி ஓகே சார் ரொம்ப தேங்க்ஸ் நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்” என்று விக்ரம், பிரகாஷ் மற்றும் சந்திரசேகரிடம் கூறி கௌதமுடன் மேலே சென்றான்.

“நான் இங்க வந்தா நானும் விகாஷும் பெரும்பாலும் அவன் ரூம்ல தான் தங்கி இருப்போம்… எனக்குன்னு ஒரு ரூம் தனியா இருக்கு இங்க, இருந்தாலும் அவன் ரூம்ல இருந்தே பழகிட்டேன்…. நீங்களும் வாங்க பெட் பெருசா தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” என்று கௌதம் கூறவும்,

“ம்ம்… சரி ஓகே… ம்ம்… கௌதம் எனக்கு…. இப்போ சனந்தாவை பார்க்கணும்” என்று தயங்கியவாறு விக்ரம் கேட்க, கௌதம் புன்னகையுடன், “இங்க பக்கத்துல தான் அவ ரூம் இருக்கு” என்று விக்ரமை அழைத்துக் கொண்டு அவளது அறைக்கு சென்றான் கௌதம்.

“இருங்க நான் எழுப்புறேன்… உங்கள பார்த்தா அவளே தலை கால் புரியாம குதிப்பா” என்று கௌதம் கூற, “இல்ல வேண்டாம் கௌதம் நானே எழுப்ப மாட்டேன் சும்மா அவள பார்த்துட்டு மட்டும் வந்துடுறேன்” என்று விக்ரம் கூறவும், “சரி ஓகே நான் ரூம்ல லாக் எல்லாம் போடல நீங்க எப்ப வந்தாலும் வந்து படுத்துக்கோங்க… பக்கத்து ரூம்ல தான் இருப்பேன்” என்று கௌதம் கூறி சென்றான்.

வழக்கமாக விக்ரம் அல்லது சரவணன் மீட்டிங் என்று கோயம்புத்தூர் வரைக்கும் வந்தால் அங்கே வழக்கமாக ஒரே ஹோட்டலில் தங்குவது தான் வழக்கம். அதே போல் இன்றும் பிரகாஷிடம் ஹோட்டலில் தங்கிக் கொள்வதாக விக்ரம் கூறவும், சந்திரசேகர் மற்றும் பிரகாஷ் விக்ரமை வலியுறுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர் அதற்கு காரணம் அவனுடைய மனநிலை.

விக்ரமிற்கும் சனந்தாவை பார்த்தால் சற்று ஆறுதல் கடைக்கும் என்று அவர்களுடன் வர ஒத்துக் கொண்டான். அதே போல் வந்ததும் அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அவனுள் முழுதாக இருந்தது. அதனால் கௌதமிடம் சட்டென்று கேட்டு விட்டான்.

விக்ரம் என்ன இருந்தாலும் சனந்தாவை பார்க்க வேண்டும் என்று சட்டென்று கௌதமிடம் கேட்டு விட்டாலும் தற்போது அவளது அறைக்குள் நுழைய பல குழப்பத்துடன் இருந்தான். பின்பு அவளை பார்த்தால் மட்டுமே இப்ப இருக்கும் குழப்பமும் மனவலியும் சரியாகும் என்பதை உணர்ந்து தைரியத்தை வர வழைத்துக் கொண்டு அவளது அறைக்குள் சென்றான்.

ஒரு பெரிய பெட் அதற்கு அருகில் வேலை செய்வதற்கு என டெஸ்க்… பெட்டுக்கு எதிரில் அவளது வாட்ரூப் ட்ரெஸ்ஸிங் டேபிள் என இருந்தது… அதனை ஒட்டி பாத்ரூம் அமைந்திருந்தது. பின்பு அவளது அறையில் இருந்து ஒரு சிறிய பால்கனியும் இருந்தது. அனைத்தும் விக்ரம் பார்த்துக் கொண்டே அவளது பெட் பக்கத்தில் கீழே அமர்ந்து கொண்டு அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மதியம் ஊரிலிருந்து அவசர அவசரமாக புறப்பட்டதும் அதை அவளிடம் கூட கூற முடியாமல் இருந்த காரணமும், இங்கு வந்த பின் பிரகாஷ் மற்றும் சந்திரசேகரை சந்தித்து பல விவரங்களை தெரிந்து கொண்ட பின் ஏற்பட்ட மனவலியும் பின் விசாரணை என்று சென்று அங்கே கிடைத்த தகவலும் இவை அனைத்தும் விக்ரமுக்கு பெரும் அழுதத்தை ஏற்படுத்தி இருந்தது.

அவளைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த அவனுக்கு, இருந்த மனவலியும் அழுத்தமும் எங்கே பறந்து போனது என்று அவனுக்கும் தெரியவில்லை. சற்று நிம்மதியாக உணர்ந்தான் அவன் அவள் முகத்தைப் பார்த்ததும்.

சிறுது நேரத்தில் சனந்தா ஏதோ உணர மெதுவாக துயில் கலைந்து பார்க்கவும், அங்கே விக்ரம் அமர்ந்து இருந்ததை பார்த்ததும், ஆ!!!…. என்று கத்த போவதற்குள் விக்ரம் அவளுடைய வாயை அவனுடைய கையால் பொத்தி, ஷ்ஷ்ஷ்.. என்று ஒற்றை விரலை காட்டினான்.

சனந்தா அவளை ஆசுவாசப்படுத்தி கொண்டு, அவனின் கையை அவள் வாய் மீது இருந்து எடுத்து, “நீங்க இங்க??? அதுவும் இந்நேரதுல என்ன பண்றீங்க?? யாராவது பார்க்க போறாங்க” என்று ஆச்சரியத்துடன் எழுந்த அமர்ந்து கொண்டு கேட்கவும்,

“உங்க அப்பா தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு… கௌதம் தான் உன்னோட ரூமை காட்டினான்… அப்புறம் முக்கியமா உன்ன சர்ப்ரைஸ் பண்ணலாம்னு தான் வந்தேன்… நீயும் மதியத்தில இருந்து நிறைய மெசேஜ் பண்ணிட்ட…. அதுக்கு என்னால தான் ரிப்ளை பண்ணவே முடியல…. அதான் நேர்ல வந்து பதில் சொல்லலாம்னு வந்திருக்கேன்” என்று விக்ரம் கூறினான்.

சனந்தா அவனை முறைத்து, உண்மைய சொல்லுங்க!!! என்று கேட்க, விக்ரம் அவளது கையை பற்றி கொண்டு, “எனக்கு நிஜமா உன்கிட்ட உண்மைய சொல்லனும்னு ஆசையா இருக்கு பூனைக்குட்டி…. என்னமோ தெரியல உன்ன பார்த்தாலே என் மனசுல இருக்குற கஷ்டம் எல்லாமே பறந்து போயிருது…. அந்த மாதிரி நேரத்துல உன்கிட்ட பேசினா இன்னும் மனசு எவ்வளவு லேசா இருக்கும் தெரியுமா… அந்த சூழ்நிலை எனக்கு சீக்கிரம் அமையனும் தான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்” என்று விக்ரம் ஆத்மார்த்தமாக கூறினான்.

“இப்போவே நிறைய பேசுறீங்க… ஆனா அது என்னன்னு தான் எனக்கு சரியா புரியல” என்று சனந்தா கூறவும், “கண்டிப்பா ஒரு நாள் புரியும் உனக்கு” என்று விக்ரம் கூறினான். “என்னவோ போங்க…. ஆமா இது நான் வாங்கி கொடுத்த டி-ஷர்ட் தானே” என்று சனந்தா கேட்க, ஆமாம் என்பதை போல் தலையை அசைத்தான்.

“நல்லா இருக்கு உங்களுக்கு” என்று சனந்தா கூறவும், விக்ரம் புன்னகைத்தான். “சரி சாப்டீங்களா??” என்று சனந்தா கேட்க, விக்ரம் ஆமோதிக்கும் விதமாய் தலையை அசைக்க, பொய் சொல்றீங்களா?? என்று சனந்தா கேட்டாள்.

விக்ரம் அவளை ஏறெடுத்து பார்த்து புன்னகைத்து, “எனக்கு பசிக்கலடா!!” என்று விக்ரம் கூறினான். “மதியம் எப்ப சாப்பிட்டுக் கிளம்புனீங்களோ இங்க வந்து எதுவுமே சாப்பிடலைன்னு சொல்றீங்க…. ப்ச்… அங்க தான் பாத்ரூம் இருக்கு ஃபிரஷ் அப் ஆகிட்டு வாங்க என் ரூம்லயே ஸ்னாக்ஸ் இருக்கு அத கொடுக்குறேன்… அதையாவது சாப்பிடுங்க” என்று கூறி சனந்தா அப்பொழுது தான் போர்வைக்குள் இருந்து அவளை விலக்கிக் கொண்டு வெளியே வந்தாள். அப்பொழுது தான் விக்ரம் அவளை முழுதாக கவனித்தான்.

அவள் ஒரு ஸ்லீவ்லஸ் டாப் மற்றும் முழங்கால் அளவிற்கு பேண்ட் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்த விக்ரம், சுதாரித்துக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்று ஃபிரஷ் அப் ஆகி வரவும் சனந்தா பால்கனியில் கீழே அமர்ந்திருக்கவும் விக்ரமை அங்கே வருமாறு கூறி, அவளிடம் இருந்த ஸ்னாக்ஸ் கொடுத்தாள்.

“இது தான் இப்போதைக்கு என் ரூம்ல இருக்கு… நான் வேற ஏதாவது கொண்டு வந்து கொடுக்கவா??” என்று சனந்தா கேட்க, “இல்லடா இதுவே போதும் தேங்க்யூ பூனைக்குட்டி” என்று விக்ரம் கூற, “ம்ம்… சரி சாப்பிடுங்க” என்று தலையை அசைத்தாள் சனந்தா.

“இங்க தான் உட்கார்ந்து இருப்பியா அடிக்கடி” என்று விக்ரம் கேட்க, “ஆமா உங்களுக்கு எப்படி மொட்ட மாடியோ எனக்கு என்னோட பால்கனி” என்று சனந்தா கூறினாள்.

“ம்ம்… இங்கே ஏதாவது பூச்செடி அந்த மாதிரி வெச்சுக்கலாமே??”என்று விக்ரம் கேட்கவும், “இல்லை இது முழுக்க என்னோட ரொம்ப ரொம்ப பர்சனல் ஸ்பேஸ்… இங்க வேற எதுவுமே இருக்காது… கீழே உட்காரத்துக்காக தான் நான் கார்பெட்டே போட்டு இருக்கேன்… இங்க தான் அடிக்கடி வந்து உட்காருவேன்… படிக்குறதும் இங்க தான் படிப்பேன்…. வேலை கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் இங்க உக்காந்து பண்ணா எனக்கு அலுப்பே தெரியாது” என்று சனந்தா கூறினாள்.

விக்ரம் அவள் கொடுத்த ஸ்னாக்ஸை சாப்பிட்டுக் கொண்டே, அவள் கூறியதை கேட்டு அவளையும் பார்த்துக் கொண்டே வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

சனந்தா, அதை உணர்ந்து என்ன என்று கேட்க, “இல்ல ஊர்ல எப்ப பார்த்தாலும் ஃபுல் டிரஸ்…. நைட்ல கூட பெரிய ஸ்கர்ட் போட்டுட்டு ஃபுல் ஹேண்ட் டாப் போட்டுட்டு தான் இருப்ப… இங்க திடீர்னு உன்னை இப்படி பார்த்ததும்…..” என்று விக்ரம் கூறவும், சனந்தாவுக்கு தன்னுடைய உடையை சுட்டு காட்டுகிறான் என்பது புரிய,

“ம்ம்… அங்க குளிரும்… இன்னொன்னு என் கையில தழும்பு இருக்கு, யாராவது ஏதாவது கேட்டா பதில் சொல்லிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்… அதனால நான் அங்க எப்பவுமே த்ரீ ஃபோர்த் இல்லன்னா ஃபுல் ஹேண்ட்ஸ் போடுவேன்…. அதே மாதிரி கால்லயும் தழும்பு இருக்கு, அங்க இருக்கிற குளிருக்கு கண்டிப்பா த்ரீ ஃபோர்த் பேண்ட்ஸ் போட முடியாது… அதனால தான்” என்று சனந்தா விளக்கம் கூறினாள்.

“இப்படி உன்ன மொத வாட்டி நேர்ல பார்க்கிறேன்… உண்மையிலேயே ரொம்ப குட்டியா தெரியுற பூனை குட்டி எனக்கு” என்று விக்ரம் கூறவும், அவன் வழக்கத்திற்கு மாறாக மெல்லிய குறலில் கூறிய பூனைக்குட்டி என்ற வார்த்தை அவளுக்கு சில்லென்று பாய்ந்தது போல் உணர்ந்தாள் சனந்தா.

“இதே தான் சொல்லி என்னை கிண்டல் பண்றீங்க” என்று சனந்தா அவளை சுதாரித்துக் கொண்டு முறையிடவும், “உண்மைய தான் சொல்றேன்… நீ படுத்துட்டு இருந்தப்போ கூட கை, கால் எதுவுமே தெரியல மூஞ்சி மட்டும் தான் தெரிஞ்சிது பெட் ஷீட்க்கு உள்ள… அப்படி சுருண்டு படுத்திட்டு பூனை மாதிரியே தான் இருந்த சனந்தா” என்று விக்ரம் பேசவும் அவன் அவளை அணு அணுவாக ரசித்து கூறுகிறான் என்பது அவளுக்கு உணரவும் அவளுக்கு உடல் முழுவதும் சிலிர்த்தது.

“என்ன எதுவுமே பதில காணோம் எப்ப பார்த்தாலும் அப்படி இல்ல அப்படி சொல்லாதீங்கன்னு சொல்லுவ” என்று விக்ரம் கேட்க, ஒன்னும் இல்லை என்பது போல் தலையை அசைத்தாள் சனந்தா. அவள் கொடுத்த ஸ்நாக்ஸை சாப்பிட்டு விட்டு அவளுடைய வலது பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான் அவளுக்கு நெருக்கமாக.

விக்ரமின் தயக்கத்திற்கான பதில் என்ன என்று அவன் அப்பொழுது தான் உணர ஆரம்பித்தான். அபர்ணாவின் உடல் உறுப்பு சனந்தாவிடம் தான் இருக்கிறது என்பதுனால் தான் விக்ரம் சனந்தாவிடம் அவனுடைய காதலை சொல்வதற்கு பெரும் தடையாக இருந்தது.

சனந்தாவை முழுமையாக அவளாக மட்டும் பார்க்க முடியாமல் அபர்ணாவும் அவளுக்குள் இருக்கிறாராளோ… அதுவும் இல்லாமல் அபர்ணாவின் இழப்பிற்கு சனந்தாவும் ஒரு முக்கிய காரணமாக இருக்ககூடுமோ என்ற எண்ணமும் இருந்தது. அது இப்பொழுது இல்லை என்ற நிம்மதியும் அவனிடம் இருந்தது.

மேலும், முதல் நாளிலிருந்து இருந்த பெரிய தயக்கம் இன்றைக்கு அபர்ணாவின் உடல் உறுப்பு சனந்தாவிடம் இல்லை என்று தெரிந்த பின் சனந்தாவை பார்க்கும் போது என்னவோ அவனுக்கு புதிதாக தான் தெரிந்தாள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல


எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 74
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.