சனந்தா அவளது பால்கனியில் அமர்ந்து கொண்டு பெரும் குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாள். “கௌதம் என்ன ஆச்சுன்னு கொஞ்சம் பாரேன்” என்று விக்ரம் கேட்க, “நான் மட்டும் வேணா உள்ள போறேன்… நீங்க வந்தீங்கன்னா ஏதாவது பேசுவாளான்னு எனக்கு தெரியல…. அதனால நான் என்னன்னு பார்த்துட்டு வந்து நான் உங்களுக்கு சொல்றேன்” என்று கௌதம் கூறவும் விக்ரம் ஆமோதித்தான்.
கௌதம் அவளது அறைக்குள் சென்று அவளை பார்க்க அவள் பால்கனியில் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் சென்று கௌதம் அமர்ந்து கொண்டு, “சனா என்ன ஆச்சு??” என்று கேட்க, “எனக்கும் தெரியல டா இதுக்கு என்ன பதில்ன்னு எனக்கும் சொல்ல தெரியல கௌதம்” என்று சனந்தா கூறவும், “முதல்ல நீ என்ன ஆச்சுன்னு சொல்லு அதுக்கப்புறம் என்னென்னு யோசிக்கலாம்” என்று கௌதம் ஆறுதல் கூறினான்.
“ம்ம்… இன்னிக்கு ஆஃபீஸ் கிட்ட வந்துட்டு இருக்கும் போது திடீர்னு ஒருத்தர் நடுவுல வந்ததும் சட்டுனு பிரேக் போட்டேன்… நான் எப்பவும் பிரேக் போடும் போது பக்கத்துல இருக்குறவங்க கிட்ட கை வெப்பேன் அது உனக்கும் தெரியும்ல, ஏன்னா சீட் பெல்ட் போட மாட்டாங்கல, அந்த ஞாபகத்துல தான் நான் இன்னிக்கும் கை வெச்சேன்”….
“ஆனா, விக்ரம் சீட் பெல்ட் போட்டிருந்தாரு அதை அதுக்கப்புறம் தான் நான் ரியலைஸ் பண்ணேன்…. ஆனா, இதே மாதிரி சம்பவம் அந்த சீட்ல ஏதோ ஒரு பொண்ணு உக்காந்துட்டு இருக்கும் போது நான் இதே மாதிரி பண்ணி இருக்கேன்னு எனக்கு தோணுச்சு…. நான் விக்ரம் மேல கை வெக்கப் போனதும் எனக்கு ஏதோ எல்லாம் என்னமோ ஞாபகம் வந்து தலை வலிக்க ஆரம்பிச்சுது…. அப்படி நான் யார கூட்டிட்டு போனேன்னு எனக்கு தெரியல… பெரும்பாலும் நான் தனியா தான் போவேன் அப்படி இல்லன்னா சீனியர் வருவாரு இல்ல நீ வருவ இவங்கள தவிர்த்து இப்படி நான் யாரையும் கூட்டிட்டு போனதில்லையே” என்று சனந்தா கூறினாள்.
“ஏன் டி அம்மாவ கூட தான் கூட்டிட்டு போய் இருக்க ஒரு வேல அவங்கள தான் இப்படி சொல்றியோ” என்று கௌதம் கூறவும், “அப்படி எனக்கு தோணல டா அம்மான்னா எனக்கு அவங்களை தெரியும் தானே…. ஆனா என் மண்டைக்குள்ள இருக்குற இவங்க யாருன்னு தெரியல… ஏதோ ஒரு உருவம் ஏதோ ஒரு பொண்ணுன்னு மட்டும் தான் எனக்கு தோணுச்சு…. நான் அவங்கள புடிக்க என் கைய கொண்டு ரொம்ப ஸ்ட்ராங்கா அழுத்தின மாதிரி எனக்கு தோணுச்சு…. இதெல்லாம் எப்ப நடந்ததுன்னு எனக்கு தெரியல கௌதம்” என்று கண்களில் கண்ணீருடன் சனந்தா கூறினாள்.
கௌதம் சனந்தாவின் கையை பிடித்து, “சனா நான் உனக்கு ஒரு சில விஷயம் சொல்றேன் சரியா நீ ரொம்ப குழப்பிக்காம கேளு” என்று கௌதம் கூறவும், சரி என்று கண்களைத் தொடைத்து கொண்டு “சொல்லு நான் கேட்கிறேன்” என்று சனந்தா கூறினாள்.
“சனா, நீ பார்ட்டில இருந்து வரும் போது தான் ஆக்சிடென்ட் ஆச்சு சரியா…. அந்த ஆக்சிடென்ட் ஆனதுலிருந்து நீ கொஞ்சம் மாசம் முன்னாடி வரைக்கும் நடந்ததெல்லாம் மறந்துட்ட” என்று கௌதம் கூறவும், “எனக்கும் தோணுச்சு டா…. ரம்யா வந்து பேசுனதுல இருந்து எனக்கு ரொம்ப சந்தேகம் இருந்தது… அதுவும் ரோகிணி அக்கா வந்து சொன்னதும் எனக்கு இன்னும் குழப்பம் ஜாஸ்தி தான் ஆச்சு…. அதனால தான் அப்போ உன்கிட்ட ஃபோன் பண்ணி பேசும் போது கூட ஊட்டில இருந்து போகும் போது ஆக்ஸிடென்ட் ஆகலயான்னு கேட்டேன்” என்று சனந்தா கூறினாள்.
“ஆமா டி” என்று கௌதம் கூற, “அதெல்லாம் சரி… ஆனா, ஏன் பார்ட்டில இருந்து வரும் போது தான் ஆக்சிடென்ட் ஆச்சுன்னு யாருமே எனக்கு உண்மைய சொல்லவே இல்ல கௌதம்” என்று ஆதங்கத்துடன் சனந்தா கேட்க, “நீ கண் முழிச்சதே ரொம்ப நாள் கழிச்சு கோமால இருந்து முழிச்ச…. அதுலயும் ஊட்டியிலிருந்து வரும் போது தான் ஆச்சோ அப்படின்னு நான் கேட்க போகவும் ஆமாம்னு எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க” என்று சனந்தா வருத்தத்துடன் கூறினாள்.
“உன்கிட்ட மறைக்கணும்னு இல்லடி… உனக்கே எதுவும் ஞாபகம் இல்லை… அந்த நேரத்துல போய் அங்க ஆக்சிடென்ட் ஆகல… இங்க தான் ஆச்சுன்னு சொல்லி உன்னை இன்னும் குழப்பத்துக்குள்ளாக்க வேண்டாம்னு தான் நினைச்சாங்க” என்று கௌதம் ஆறுதல் கூறினான். “நேத்தும் அப்படி தான் லிவர் டாக்டர் கிட்ட உன் பேர்ல அப்பாயின்மென்ட் வாங்கிட்டு செக் அப்கு போக சொன்னாங்க… நானும் எதுவும் கேட்காம சரின்னு சொன்னேன்… அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனிங் எல்லாம் பண்ணாங்க…” என்று சனந்தா பேசுகையில்,
“இவ இன்னும் போனா ரொம்ப நோன்ட ஆரம்பிச்சுருவா கௌதம்” என்று கௌதம் மனதிற்குள் நினைத்துக் கொண்டு, “அப்ப ஒரு வேல உனக்கு ஞாபகம் இல்லாத அந்த இடைப்பட்ட காலத்தில தான் நீ விக்ரமா பார்த்து இருப்பியோ” என்று கௌதம் பேச்சை மாற்றும் விதமாக கேட்க, “அந்த பார்ட்டிக்கு எப்படியும் விக்ரம் அவங்க வந்திருப்பாங்க அதனால அப்போ அங்க பார்த்திருப்பேனோ” என்று சனந்தா கேட்க, “அது எனக்கு தெரியல… அப்ப நான் உன் கூட இல்ல அதனால என்னால உறுதியா எதுவும் சொல்ல முடியல” என்று கௌதம் கூறினான்.
“எனக்கு அவர பார்த்த மாதிரி ஒரு உணர்வு இருந்துது…. அதுவும் ரொம்ப புதுசா உணர்வு இருந்துது…. இப்போ நீ இத கன்ஃபார்ம் பண்ணதுக்கு அப்புறமா தான் எனக்கு இந்த டவுட் வருது ஒரு வேல அப்போ பார்த்திருப்பேனோன்னு” என்று சனந்தா கூறினாள்.
“சரி இங்க பாரு என்னவா வேணா இருக்கட்டும் சரியா அதெல்லாம் நடந்து முடிஞ்சது…. இப்ப ரொம்ப போட்டு குழப்பிக்காத” என்று கௌதம் கூறவும், “அப்போ அந்த ஆக்சிடென்ட் நடந்த அப்ப தான் என் கூட யாராவது இருந்தாங்களோ??” என்று குழப்பத்துடன் சனந்தா கேட்க,
“இப்ப தானே டி சொல்றேன்… ரொம்ப குழப்பிக்காத… இப்ப என்ன இருக்கு இதை என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் நடந்து முடிஞ்சதை மாத்த முடியாது” என்று கௌதம் கூறவும், “அப்போ உனக்கு ஏதாவது தெரியுமா டா…. நடந்து முடிஞ்சத மாத்த முடியாது, நடந்து முடிஞ்சத விட்டுடுன்னே பேசிகிட்டு இருக்கியே நீ” என்று சனந்தா சந்தேகத்துடன் கேட்டாள்.
கௌதம் தன்னை ஒரு நொடி சுதாரித்துக் கொண்டு, “லூசா நீ அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்று கூறி, “ஐயோ இப்ப எப்படி இவள டைவர்ட் பண்ணனுமே” என்று மனதில் நினைத்துக் கொண்டு, “இங்க பாரு நீ சாப்பிடலைன்னு விக்ரம் கூட சாப்பிடல…. அவரும் நீ எப்படி இருக்க என்ன ஏதுன்னு என் உயிர் எடுத்துட்டு இருந்ததினால தான் நான் உன்னை வந்து பார்த்தேன்” என்று சலித்துக் கொண்டு கௌதம் கூறவும், “ஆமால… நான் ஏதோ யோசனைல அப்படியே வந்துட்டேன்… இரு நானும் வரேன் சாப்பிட போலாம் வா” என்று சனந்தா எழுந்து ஃபிரஷ் அப் ஆகி வந்து கௌதம் மற்றும் விக்ரமுடன் சேர்ந்து உணவு அருந்தினாள்.
உணவருந்தும் போது பெரிதாக எதையும் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு இருக்க விக்ரமும் அவள் சரியாகி விட்டாள் என்று நினைத்துக் கொண்டான். இது சனந்தாவுக்கு உரித்தான ஒரு திறமையாகும் அவள் முகத்தில் எதையும் காட்டாமல் வைத்திருப்பது.
“ஆன்… கௌதம் இன்டர்வியூ என்ன ஆச்சு??” என்று விக்ரம் கேட்க, “ஹே ஆமாண்டா அது கேட்கவே மறந்துட்டேன்… என்ன ஆச்சு??” என்று சனந்தா கேட்கவும், “இப்ப ஆச்சும் ஞாபகம் வந்ததுதே உங்க ரெண்டு பேருக்கும்” என்று சலித்துக் கொண்டு, “நல்லா தான் போச்சு…. நாளைக்கு திரும்ப வர சொல்லி இருக்காங்க எக்ஸ்பெரிமெண்ட் அண்ட் ப்ராக்டிகல் டெஸ்ட் இருக்கு அதெல்லாம் முடிச்சிட்டு அதுக்கப்புறம் தான் என்னன்னு தெரியும்” என்று கௌதம் கூறினான்.
“அப்ப நீ எங்களோட இன்னிக்கு ஊருக்கு வரலையா??” என்று சனந்தா கேட்க, “இல்லடி நான் வரல நான் இங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு ஆஃபர் லெட்டரோட ஒரேடியா ஊருக்கு வரேன்” என்று கௌதம் காலரை தூக்கிக் கொண்டு கூற, “நீ ஆஃபர் லெட்டரை மட்டுமா எடுத்துட்டு வர பிளான் பண்ணி இருப்ப??” என்று கேலியாக சனந்தா கேட்கவும், கௌதம் புன்னகைத்து, “பெரிய சர்ப்ரைஸ் வைக்கிறேன் வெயிட் பண்ணு” என்று கௌதம் கூறினான்.
உணவருந்திய பின் சனந்தா, ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கூறி அவளுடைய அறைக்கு வந்து சிறிது நேரம் உறங்கிவிட்டாள். கௌதம் சனந்தாவுடன் நடந்த உரையாடலை விக்ரமிடம் கூறவும், “அவளுக்கு இவ்வளவாவது தெரியனும் இல்லனா குழப்பத்திலேயே தான் இருப்பா பாவம்” என்ற விக்ரம் கூறவும்,
“அதனால தான் இப்போதைக்கு இதை மட்டும் சொல்லி இருக்கேன் விக்ரம்… கொஞ்ச நாள் போகட்டும் அவளுக்கே எல்லாம் ஞாபகம் வந்துரும்னு எனக்கு தோணுது” என்று கௌதம் கூறவும், “வந்துட்டா எல்லாருக்குமே நிம்மதியாயிரும் கௌதம்” என்று விக்ரம் கூறினான்.
“ம்ம்…. சரி நீங்களும் போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க சாயந்திரமா ரெடி ஆயிட்டு ரிசப்ஷனுக்கு கிளம்புவோம்” என்று கௌதம் கூறவும் விக்ரமும் சரி என்று ஓய்வெடுத்துக் கொண்டான்.
மாலையில் மூவரும் தயாராகி இருக்கவும், சரவணன் வந்து சேர்ந்தான். பரஸ்பர நலம் விசாரித்தல் அனைத்தும் முடிந்த பின், அனைத்து லக்கேஜும் சரவணன் வண்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
“இந்த வாட்டி உன்கிட்ட சரியா பேசவே முடியல டா” என்று சந்திரசேகர் கூறவும், “ஆமாம் பா…. எனக்கும் அப்படி தான் இருக்கு….. நேத்து காலையிலையே நீங்க கிளம்பிட்டீங்க…. நானும் வேலை எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வர வரைக்கும் நீங்க வீட்டுக்கு வரல…. இன்னிக்கு காலையில நான் கல்யாணத்துக்கு சீக்கிரமா கிளம்பிட்டேன் நான் வீட்டுக்கு வரும் போது நீங்க அம்மா யாருமே இல்ல பிஸியா வெளில போயிட்டீங்க” என்று சனந்தா கூறினாள்.
“சரி சரி விநாயகர் பூஜைக்காக விக்ரமோட அம்மா அப்பா இரண்டு பேருமே கூப்பிட்டு இருக்காங்க நாங்க அப்ப வரோம் ஊருக்கு” என்று சந்திரசேகர் கூற, “நிஜமா தான் சொல்றீங்களா??? வரீங்களா??” என்று சனந்தா உற்சாகத்துடன் கேட்க, “ஆமாண்டா கண்டிப்பா வரோம்” என்று உறுதி அளித்தார் சந்திரசேகர்.
லக்ஷ்மி, சந்திரசேகர் மற்றும் பிரகாஷிடம் இருந்து நால்வரும் விடை பெற்றுக் கொண்டு ரிசப்ஷனுக்கு புறப்பட்டனர். அங்கே விக்ரமுடைய நண்பர்கள் இன்னும் நிறைய பேர் வந்திருந்ததால் விக்ரம் மற்றும் சரவணன் அவர்களுடன் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தனர்.
மேலும் கௌதம் மற்றும் சனந்தா அவர்களின் நண்பர்கள் கூட்டம் வந்திருந்ததால் இருவரும் அவர்களுடன் நேரத்தை செலவழித்துக் கொண்டு இருந்தனர்.
என்ன தான் சனந்தா அவர்களின் நண்பர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தாலும் அவளது கவனம் சற்று சிதறி இருந்தது என்னமோ உண்மை தான். அதை விக்ரம் அவ்வப்போது கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
“என்னடா அவளையே பார்த்துட்டு இருக்க??” என்று சரவணன் கேட்க, விக்ரம் நடந்ததை கூறவும், “அப்ப கூடிய சீக்கிரம் அவளுக்கு ஞாபகம் வந்துரும் எல்லாம்” என்று சரவணன் கூறவும்,
“எனக்கு அது தெரியல இப்போ என் மண்டையில என்ன இருக்குன்னா நம்ம சனந்தாவ தெரிஞ்சு தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கோம்னு அவளுக்கு தெரிஞ்சா அவ எப்படி ஏத்துப்பான்னு எனக்கு யோசனையா இருக்கு” என்று விக்ரம் கூறவும், “உன் பிரச்சனை உனக்கு…. அதெல்லாம் சொல்லி புரிய வெச்சிடலாம் நீ ஒன்னும் வருத்தப்படாதே” என்று சரவணன் ஆறுதல் கூறினான்.
நால்வரும் உணவு அருந்திவிட்டு கௌதம் அவனுடைய வீட்டிற்கு செல்ல சரவணன், விக்ரம் மற்றும் சனந்தா கிராமத்திற்கு சென்றனர்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 78
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.