என் செல்லக் கண்ணா (on going)

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
246
0
16
www.amazon.com
1000117713.jpg


கதையைப் பற்றி:

கமல், காவியா இருவரும் ஒரு டிவி சேனலில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.‌ கமல் தனது சிறுவயதில் இருந்தே அவனுடைய அத்தை மகளான கயல் விழியை காதலித்து வருகிறான். அவளும் தான். கயல் விழிக்கு கமல் தான் உலகம். அதேபோல காவியாவும் தனது காலேஜ் சீனியரான IT employee ராகவை காதலிக்கிறாள். ஏற்கனவே ராகவிற்கும், காவியாவிற்கும் என்கேஜ்மென்ட் நடந்து முடிந்திருக்கும் நிலையில், திடீரென்று ஒரு எதிர்பாராத சம்பவத்தால் நெருங்கிய நண்பர்களாக இருந்த காவியாவும் கமலும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

திருமணமான பிறகு வேறு வழி இல்லாததால் காவியா கமலின் வீட்டிற்கு செல்ல, கமலின் அக்கா சுபாஷினியை கயல்விழியின் அண்ணனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்ததால், தன் அண்ணனின் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக அந்த வீட்டில் தங்கி இருந்த கயல்விழி மீண்டும் தன் மாமா கமலை தன் வழிக்கு கொண்டு வருவதற்காக அவள் அத்தையுடன் சேர்ந்து கொண்டு முயற்சிக்கிறாள்.

ஏற்கனவே கயல்விழியை காதலித்து இருந்தாலும், காவியா உடனான திருமணம் கமலின் மனதை மாற்றலாமா? காவியா மற்றும் ராகவின் காதல் என்னானது? இப்படி இடியாப்ப சிக்கல் போல இருக்கும் இந்த குழப்பமான காதல் கதையில் காவியா, கயல்விழி என 2 பெண்களுக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட கமலக்கண்ணனின் நிலை என்னவானது? அதை தெரிந்துக் கொள்ள இந்த நாவலை தொடர்ந்த படியுங்கள்.


கதையின் நேரம்:

இந்த கதை தினந்தோறும் மதியம் 3 மணிக்கு நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் பதிவேற்றப்படும்.

கதையைப் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: