காதல் ❤️

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
246
0
16
www.amazon.com
1000108899.jpg

“காதல்”

இந்த மாயை கொடுக்கும் மயக்கம் உலகில் உள்ள எந்த மருந்தாலும் தீர்க்க முடியாதது.‌
இந்த மனிதன் எத்தனையோ முறை எண்ணற்ற முறைகளை பயன்படுத்தி காதலித்தாலும், காதல் என்றால் என்னவென்ற கேள்வியில் மட்டும் எப்போதும் பதில் சொல்ல முடியாமல் தோற்றுவிடுகிறான்.
இந்த காதல் ஒரு விவரிக்க முடியாத விந்தை.‌
இந்த பேரண்டத்தின் முதல் பிரம்மாண்டம்.
நாம் காதலிக்கும் நபரிடம் என்ன இருக்கிறது? ஏன் நம் இதயம் அவரது கால்களில் விழுந்து கிடக்க துடிக்கிறது? தெரியவில்லையே..
ஆத்மாவின் சட்டையாம் இந்த அற்ப மானிட உடலின் மீது காமம் கொண்டதால், ஆசை கொண்டேன் என்பார்களே..‌ அதுதான் காதலா?
நிச்சயமாக இல்லை.
ஏன் உன்னை பார்க்க நினைக்கிறேன்?
ஏன் உன் வார்த்தைகளில் மயங்குகிறேன்?
ஏன் பொய் என்று தெரிந்தும், உனது தற்காலிக சத்தியங்களை நம்பி உன்னிடம் சரண் அடைகிறேன்?
ஒரே ஒரு நொடி பார்வை பரிமாற்றத்திற்காக, ஓராண்டு முழுவதும் காத்திருந்தால் கூட சுகமாக இருக்கிறதே..
ஆறுதலாக உன்னிடம் இருந்து நான் எதிர்பார்த்த அந்த நான்கு வார்த்தைகள் கிடைக்காமல் போனாலும், உன்னிடம் பேச கிடைத்த வாய்ப்பே வரமென்று வாழ்கிறேனே
பிரிந்து தான் செல்லப் போகிறாய் என்று தெரிந்தும், உன்னுடன் எப்போதும் அதே பிரியத்துடன் இருக்கிறேனே
உனக்கே தெரியாமல் உன் தலையில் இருந்து பறந்து வந்து என் மடியில் ‌விழுந்த ஒற்றை முடியை துட்ச்சம் என நினைக்காமல் ‌ உன் ஞாபகங்களாய் சேர்கிறேனே..
அப்படி என்ன எதிர்பார்த்து விட்டேன் உன்னிடம் உன் உறவையும் நீ எனக்கு கொடுக்கும் உரிமையையும் தவிர?
நீ ஓராயிரம் முறை என் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்தாலும், என்றும் உடையாமல் பாதுகாக்கிறேன் உனக்கான என் உணர்ச்சிகளை.
நாளை நிச்சயமற்ற இந்த வாழ்க்கை பயணத்தில், நரை முடியோடு இருக்கும் உன்னை மரணம் தழுவிக் கொள்ளும் நொடி வரை விலகாது தழுவிக் கொண்டிருக்க ஏன் ஏங்குகிறேன்?
எல்லையற்ற பெரும் இன்பத்தை எத்தனையோ விஷயங்களில் பெற முடியுமாம்.
பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்.
ஆனால் உன் அருகாமை கொடுக்கும் இதமான சுகத்தை விட, வேறு எதிலும் என் மனம் நிலைத்ததில்லை.
நீ பக்கத்தில் இருந்தால், உன்னை இமைக்க மறந்து பார்த்து ரசித்து என்னையும் மறப்பேன்.
நீ தூரம் சென்றால் உன் நினைவுகளை நித்தமும் ஆரத்தழுவி நிஜத்தை மறந்து கற்பனையில் உன்னுடன் வாழ்ந்து இந்த ஜென்மத்தை இனிதே முடிப்பேன்.
இப்படி எல்லாம் தோன்றுகிறதே..
ஒருவேளை இதுதான் காதலா?
அதற்கும் விடை தெரியவில்லை.
உன் மீது நான் கொண்ட நேசம் என்றுமே என்னால் விவரிக்க முடியாதது.
தமிழின் எந்த ஊமைகளுக்குள்ளும், வசீகரமான வார்த்தைகளுக்குள்ளும் அடங்காதது. @black_hearted_phoenix_
 

Author: thenaruvitamilnovels
Article Title: காதல் ❤️
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.